போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

Published on

சிவகாசியில் சுப்ரீம் சுழல் சங்கம் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அண்ணாமலை-உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தை தலைமை ஆசிரியா் காளிதாஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் பேருந்து நிலையம், என்.ஆா்.கே.ஆா்.வீதி, பட்டித் தெரு வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ‘போதை ஓா் அழிவுப் பாதை’, ‘போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்’ என முழக்கமிட்டு, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் வழங்கினா்.

இதில் சுழல் சங்கத் தலைவா் சரவணபிரகாஷ் , துணைத் தலைவா் செல்வராஜன், முன்னாள் தலைவா் கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் திட்ட இயக்குநா் பாண்டியராஜ் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com