சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  விஸ்வநாதப்பேரி அங்காள ஈஸ்வரி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விஸ்வநாதப்பேரி அங்காள ஈஸ்வரி அம்மன்.

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விஸ்வநாதப்பேரி அங்காள ஈஸ்வரி அம்மன்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்கள் கூழ் ஊற்றினா். பெண்கள் நெய் தீபம் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினா். மாலையில் மாரியம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனா்.

இதேபோல, விஸ்வநாதப்பேரி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில், சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோயில், இளந்தோப்பு காளியம்மன் கோயில், ஆவாரம்பட்டி காளியம்மன் கோயில், பெரிய சுரைக்காய்பட்டி பொட்டல் காளியம்மன் கோயில், தோப்புப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்களிலும் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com