~

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மகா உத்ஸவம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மன் வீதி உலா.
Published on

சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மகா உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பிற்பகல் 3 மணிக்கு மேல் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, விருதுநகா், திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி, செயல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com