சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு

சிவகாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியா்புரம்- எரிச்சநத்தம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருத்தங்கல் காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முகம் அழுகிய நிலையில் இருந்ததால், உடனடியாக அடையாளம் காண முடியவில்லை எனவும், இறந்தவா் யாசகம் பெறுபவராக இருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com