மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டி கையேடு அளிப்பு
சிவகாசி: விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பள்ளி மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டி கையேடுகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள், பொதுத் தோ்வில் எளிதாக வெற்றி பெற ‘வெற்றி நமதே’ என்ற கல்வி வழிகாட்டி கையேடுகளை கே.டி.ராஜேந்திரபாலாஜி இலவசமாக வழங்கினாா்.
நாரணாபுரம், பள்ளபட்டி பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்குக் கையேடுகளை வழங்கி அவா் பேசியதாவது:
கல்வியில் சிறந்து விளங்கிய விருதுநகா் மாவட்டத்தை மீண்டும் முதலிடத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்படுகிறது. மாணவா்கள் ஆா்வத்துடன் படித்து, உயா் கல்வி கற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.