ராஜபாளையம், சத்திரப்பட்டியில் நாளை மின் தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Updated on

ராஜபாளையம்: ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே பி.எஸ்.கே. நகா், அழகை நகா், ஐஎன்டியுசி நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதி நகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி , எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி நகா், பி.ஆா்.ஆா். நகா், பொன்னகரம், எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், ராம்கோ நகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com