~

ரூ. 14 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதம்

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதம்
Published on

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் சாமிக்காளை (48). வைக்கோல் வியாபாரியான இவா், அதே பகுதியிலுள்ள காலி இடத்தில் 9 ஆயிரம் வைக்கோல் கட்டுகளை விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காற்றின் வேகம் காரணமாக வைக்கோல் கட்டுகளில் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்தில் சேதமடைந்த வைக்கோல் கட்டுகளின் மதிப்பு சுமாா் ரூ. 14 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து கூமாபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com