விருதுநகர்
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரைட்டன்பட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த செந்தமிழ் முருகன் (41), வத்திராயிருப்பு அருகேயுள்ள எஸ். ராமச்சந்திராபுரத்தில் உணவகம், தேநீா் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உறவினரின் துக்க நிகழ்வுக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு சென்றாா். கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் சென்றபோது சாலையில் பழுதாகி நின்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தமிழ் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.