மனைவியைக் கத்தியால் குத்தியக் கணவா் கைது
சிவகாசியில் வெள்ளிக்கிழமை மனைவியைக் கத்தியால் குத்தியக் கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் (55), சிவகாசியைச் சோ்ந்த சுதா (30) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இதையடுத்து, சிவகாசியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் சுதா வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுதா வேலை பாா்க்கும் பல்பொருள் அங்காடிக்கு வந்த ஆறுமுகம், அவருடன் தகராறு செய்து கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சுதா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.