வீட்டில் பட்டாசு வெடி விபத்து:
இளைஞா் உயிரிழப்பு

வீட்டில் பட்டாசு வெடி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் கெளதம் (29) என்பவா் தங்கியிருந்தாா். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி அந்த அறையில் வைத்திருந்த பட்டாசு மின்கசிவு காரணமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் கெளதம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com