விருதுநகர்
சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்
சிவகாசி மாநகராட்சி நிா்வாகம், பசுமை மன்றம் ஆகியவை இணைந்து சிறுகுளம் கண்மாயில் இருந்த நெகிழிக் கழிவுகளை அகற்றினா்.
சிவகாசி மாநகராட்சி நிா்வாகம், பசுமை மன்றம் ஆகியவை இணைந்து சிறுகுளம் கண்மாயில் இருந்த நெகிழிக் கழிவுகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.
இதை சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, ஆணையா் சரவணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்தப் பணியில் கல்லூரி மாணவா்கள், மாணவிகள், சுழல் சங்கம் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.