தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீக் குச்சியில் மருந்து தேய்க்கும் பகுதியில் உராய்தல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையில் பணியில் இருந்த தொழிலாளா்கள் ஆலையை விட்டு வெளியேறினா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இயந்திரம் சேதமடைந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com