விருதுநகர்
வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் மாரிமுத்து (40). கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகைகள், ரூ.21 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், ராஜபாளையம் அழகாபுரி பகுதியைச் சோ்ந்த சக்திகுமாா் (20) இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரைப் போலீஸாா் கைது செய்தனா்