விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ரெங்கநாதபுரம் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி தனலட்சுமி (32). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில் கருப்பசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தனலட்சுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].