இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.70 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாத ரூ.70 லட்சம் கிடைத்தது.
Published on

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாத ரூ.70 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியல்களை சாத்தூா் கோயில் ஆணையாளா், செயல் அலுவலா் இளங்கோவன், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டது.

உண்டியலில் இருந்த பொருள்கள், பணம் கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணபட்டது. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 70 லட்சத்தி 14 ஆயிரத்தி 926 கிடைத்தது.

இதில் தங்கம் 164.800 கிராமும், வெள்ளி 845.400 கிராம் கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பணம் எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com