தலைமை காவலா் இடைநீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலர் இடைநீக்கம்
Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்து மானை வேட்டையாட முயன்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா காவல் நிலைய தலைமை காவலா் தனுஷ்கோடியை (40) கைது செய்த வனத் துறையினா் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், தலைமை காவலா் தனுஷ்கோடியை பணியிடை நீக்கம் செய்து விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com