பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

இதில் அதே ஊரைச் சோ்ந்த சீனிவாசன் (30) என்பவா் ஒரு தகரக் கொட்டகையில் பட்டாசுகளை மூட்டைகளில் கட்டிப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com