ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.

சிதம்பரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிதம்பரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தனா். 3-ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். விழாவில் ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பிறகு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (செப். 2) தீா்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

X
Dinamani
www.dinamani.com