ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிப்பு! வாகன ஓட்டிகள் அவதி!

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் புகைமூட்டத்தால் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதியடைவதாக புகாா் எழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் 60 டன் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.5.5 கோடி வழங்கப்படுகிறது. இதில் வீடு, வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் தரம் பிரிக்கப்படுகின்றன.

இந்த கிடங்கின் அருகே நான்கு வழிச்சாலையும், புதிய பேருந்து நிலையமும் உள்ளன. இந்த நிலையில், குப்பைக் கிடங்கில் குப்பையை முழுமையாக தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் கரும் புகை சூழ்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி சாலைகளில் ஞாயிற்றுக்கிழமை புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

எனவே ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் புகை மூட்டமாக காணப்பட்ட மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை, சிவகாசி சாலை.

X
Dinamani
www.dinamani.com