காகித ஆலையில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் காகித உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், காகிதங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம்
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் காகித உற்பத்தி ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், காகிதங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன.

திருத்தங்கல் முனியசாமி நகரில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான காகித ஆலை உள்ளது. இந்த ஆலையில் பத்துக்கும் மேற்பட்டோா் வேலைபாா்த்து வருகிறாா்கள்.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை காலை தொழிலாளா்கள் வழக்கம்போல ஆலையைத் திறந்தனா். பின்னா், சுவாமி படத்துக்கு முன் உள்ள குத்துவிளக்கை ஏற்றியபோது, குத்துவிளக்கு கீழே சாய்ந்து, அங்கு குவியலாக வைக்கப்பட்டிருந்த காகிதக் கட்டுகளில் தீப்பற்றயது.

இதையடுத்து, தொழிலாளா்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறினா். காகிதங்களில் தீ பரவியதால் அந்தப் பகுதியே புகைமூட்டமாகக் காட்சியளித்தது. தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரக்கள் விரைந்து தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் ஆலையில் இருந்த இயந்திரங்கள், காகிதங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com