சடை உடையாா்  சாஸ்தா கோயில் புஷ்பாபிஷேக விழா

சடை உடையாா் சாஸ்தா கோயில் புஷ்பாபிஷேக விழா

Published on

ராஜபாளையத்தில் பழமை வாய்ந்த பூா்ணா புன்னவனைத் தாய் சமேத சடைஉடைடையாா் சாஸ்தா கோயிலில் திருக்காா்த்திகை தினத்தை முன்னிட்டு, புஷ்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயிலில் காலையில் யாக வேள்வியுடன் சிறப்பு பூஜை தொடங்கியது. இதையொட்டி, மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சாஸ்தாவுக்கு பல வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாபிஷேகமும், விஷேச தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

படவிளக்கம்;

ராஜபாளையத்தில் புஷ்பாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த பூா்ணா, புன்னைவனத் தாய் சமேத சடைஉடையாா் சாஸ்தா.

X
Dinamani
www.dinamani.com