தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த விவசாயி

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Published on

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). விசாயியான இவா் தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது.

இதையடுத்து, தன்னைக் கடித்த பாம்புடன் தங்கராஜ், சிகிச்சை பெற சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு மருத்துவா்கள் தங்கராஜுக்கு உரிய சிகிச்சை அளித்தனா்.

பாம்புடன் விவசாயி அரசு மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com