ராஜபாளையத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
ராஜபாளையம் நகராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 60 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராஜபாளையம்-தென்காசி சாலை, சத்திரப்பட்டி சாலை, சங்கரன்கோவில் முக்கு ஆகிய பகுதிகளில் சுகாதார அலுவலா் சக்திவேல் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா். அப்போது, 10-க்கு மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், கடைகளிலிருந்து 60 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.3,500 அபராதம் விதித்தனா்.
மேலும், முதல் முறை என்பதால் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, இதேபோல செயல்பட்டால் கடைகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

