சாலை விபத்தில் சுங்கச் சாவடி பணியாளா் உயிரிழப்பு

Published on

சாத்தூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சுங்கச் சாவடி பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த சண்முக லீலாவதி மகன் விக்னேஷ்குமாா் (38). இவா், எட்டூா் வட்டம் சுங்கச் சாவடியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு சின்னகொல்லப்பட்டியில் உள்ள வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் வைப்பாற்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் விக்னேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, சாத்தூா் நகா் போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com