சிவகாசியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

Published on

சிவகாசியில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச.13) நடைபெறும் என சிவகாசி மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘நலன் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம், சிவகாசி அம்மன்கோவில்பட்டியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பொதுமருத்துவம், எலும்பு முறிவு, மகளிா், குழந்தைகள் மருத்துவம், இருதயம், நரம்பியல், முடநீக்கியல் உள்ளிட்ட 17 வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவையும் வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com