பைக் மீது காா் மோதியதில் ஆசிரியா் உயிரிழப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற ஆசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் வின்சென்ட் (80). இவா் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையத்தில் உள்ள உறவினரைப் பாா்க்க தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றபோது கோதைநாச்சியாா்புரம் அருகே காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் இவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வின்சென்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரின் ஓட்டுநா் அரவிந்த் குமாரிடம் (27) விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com