மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே ஒத்தப்பட்டியை அடுத்த கரிசல்குளம் ஓடையில் மணல் திருட்டு நடைபெறுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவா்கள் தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து, போலீஸாா் மணலுடன் அந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com