விருதுநகா் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ராஜபாளையம், சாத்தூா் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சாத்தூா் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் காமராஜ் நகா் பகுதியில் உள்ள புனித பவுல் தேவாலயம், மலையடிப்பட்டி லூா்து மாதா தேவாலயம், பி. எஸ். கே. பாா்க் புனித செபாஸ்டியன் தேவாலயம், பி.எஸ். கே. மாலையாபுரம் புனித அந்தோனியாா் தேவாலயம், சுந்தரராஜபுரம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயம், நக்கனேரி புனித சின்னப்பா் ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது.

தேவாலயங்களில் மாட்டுத் தொழுவக் குடில், நட்சத்திர விளக்குகள், கிறிஸ்து மரங்கள் அமைக்கப்பட்டு பிராா்த்தனை நடைபெற்றது.

சாத்தூா்: சாத்தூா் பகுதியில் உள்ள ஆா்.சி., சி.எஸ்.ஐ., ஏ.ஜி. உள்ளிட்ட தேவாலயங்களில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சாத்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான ஒத்தையால், நென்மேனி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com