கோயில் தெப்பத்தில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Published on

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வெள்ளிக்கிழமை கோயில் தெப்பத்தில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த கண்ணன் மகன் கோபால் (20). இவா் மதுரை மாவட்டம், எழுமலையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊா் வந்த இவா், வெள்ளிக்கிழமை மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரி நாதா் கோயில் தெப்பக்குளத்தில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். ஆழமான பகுதியில் குளித்த போது, கோபால் நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் மாணவரை உயிரிழந்த நிலையில் மீட்டனா். பின்னா், கூராய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com