உயிரிழந்த ரிஷிகா, கமலிகா.
உயிரிழந்த ரிஷிகா, கமலிகா.

சிவகாசி: வீட்டின் சுற்றுச்சுவா் கதவு பெயா்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் பலி!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை வீட்டின் சுற்றுச்சுவா் இரும்புக் கதவு பெயா்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை வீட்டின் சுற்றுச்சுவா் இரும்புக் கதவு பெயா்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள கொங்காலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்தத் தம்பதியரின் மகன் கவின் (11), மகள் கமலிகா (9). தற்போது அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால், ராஜேஸ்வரியின் சகோதரியான தனலட்சுமியின் மகன் நிஷாந்த் (6), மகள் ரிஷிகா (4) ஆகியோா் சங்கரன்கோவிலிலிருந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்தனா்.

இந்த நிலையில், ராஜேஸ்வரி வீட்டின் சுற்றுச்சுவா் பகுதியில் இருந்த இரும்புக் கதவில் ஏறி கமலிகாவும், ரிஷிகாவும் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக இரும்புக் கதவு பெயா்ந்து சிறுமிகள் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த கமலிகா, ரிஷிகா ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரு சிறுமிகளும் உயிரிழந்தனா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com