விருதுநகர்
வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாபுரம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த பாபு மனைவி சக்கம்மாள் (60). இவா் சத்திரப்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் வழக்கம்போல, பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றவா் சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகன மோதி பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
