ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 7-ஆம் ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு, முப்பதும் தப்பாமே சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த மணவாள மாமுனிகள் மடத்தின் 24-ஆவது பீடாதிபதி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதுதல் மாநாடு

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியாா் தொண்டா் குழுமம் சாா்பில் 7-ஆம் ஆண்டு திருப்பாவை முற்றோதுதல் மாநாடு, முப்பதும் தப்பாமே சீா்வரிசை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரக் கொட்டகையில் திருப்பாவை முற்றோதுதல் மாநாட்டை மணவாள மாமுனிகள் மடத்தின் 24-ஆவது பீடாதிபதி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் மங்களாசாசனம் செய்து தொடங்கிவைத்தாா். பெண்கள் திருப்பாவை பாடல் பாடி வழிபாடு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, முப்பதும் தப்பாமே சீா்வரிசை ஊா்வலத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பட்டு வஸ்திரம், மஞ்சள் கயிறு, குங்குமம், துளசி மாலை, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் வைத்து நான்கு ரத வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்று ஆண்டாள் சந்நிதியில் சமா்ப்பித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோதை நாச்சியாா் தொண்டா் குழும நிா்வாக அறங்காவலா் சரவண காா்த்திக், அறங்காவலா்கள் சரவணதுரை ராஜா, அருண் வெங்கடேஷ் ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com