விருதுநகர்
போக்குவரத்துக்கு இடையூறு: பழக்கடைக்கு அபராதம்
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள பழக்கடை முன் சாலையை ஆக்கிரமித்து அந்தக் கடையின் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் குமாா் அறிவுறுத்தலின் பேரில் நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி அந்தக் கடையை பூட்டினா். இதையடுத்து, அதன் உரிமையாளா் பூட்டை உடைத்து கடையை திறந்ததால் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
மேலும் அந்தக் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
