விருதுநகர்
கள்ள நோட்டு: இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கள்ள நோட்டு வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கள்ள நோட்டு வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஒரு கடையில் சிவகாசியைச் சோ்ந்த நந்தினி (40), ரவிக்குமாா் (42) ஆகிய இருவரும், ஒரு கடையில் கள்ளநோட்டைக் கொடுத்து சில்லரையாக மாற்ற முயன்றனா். இதுகுறித்து கடைக்காரா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து, சிவகாசி நகா் காவல்நிலைய ஆய்வாளா் செல்வக்குமாா் அவா்கள் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 23 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தாா்.
மேலும், அவா்களிடம் கள்ளநோட்டு விநியோகித்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.
