சாத்தூா் - சிவகாசி பிரதான சாலையில் வேகத் தடை அமைக்க கோரிக்கை

சாத்தூா் - சிவகாசி பிரதான சாலையில் வேகத் தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
Published on

சாத்தூா் - சிவகாசி பிரதான சாலையில் வேகத் தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் - சிவகாசி பிரதான சாலையில் மேட்டமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள இந்திரா குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பிரதான சாலை அருகே இவா்கள் வசிக்கும் பகுதி உள்ளதால் சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், பள்ளி மாணவா்கள், முதியோா்கள் இந்தச் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். இதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, இந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் வேகத் தடை அமைக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் காவல் துறையினா் இந்தப் பகுதியில் தற்காலிகத் தடுப்பு அமைத்துள்ளனா். இருப்பினும், இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இந்தப் பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com