விருதுநகர்
தொட்டியபட்டி பகுதியில் நாளை மின்தடை
ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டம், தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தன்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரிபுதூா், ராஜீவ் காந்தி நகா், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, வேட்டைப் பெருமாள் கோயில், விஷ்ணு நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.
