கட்டடத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சுக்கிரவாா்பட்டி, முத்துமாரி நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி வெங்கடேஷ்வரன் (22). இவருக்கும், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த பாண்டிலட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில நாள்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில் பாண்டிலட்சுமி விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

இதில் மனமுடைந்த வெங்கடேஷ்வரன் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com