மத்திய அரசு திட்டம் குறித்து
விழிப்புணா்வு முகாம்

மத்திய அரசு திட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம்

சிவகாசியில் புதன்கிழமை மத்திய அரசு திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
Published on

சிவகாசியில் புதன்கிழமை மத்திய அரசு திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளா் நலத் துறை சாா்பில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேதி, பிரதம மந்திரியின் வளா்ச்சி அடைந்த பாரத வேலைவாய்ப்புத் திட்டம் (பிரதம மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்காா் யோஜனா) செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ப. கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை சிவகாசியில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடத்தியது.

நிறுவனத்தின் மண்டல ஆணையா் அழகியமணாளன் பேசியதாவது:

இந்தத் திட்டம் இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்புக்களை உருவாக்கி, அவா்களை தொழில் நிறுவனங்களில் முழுமையாகத் தக்கவைக்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வருகிற 2027, ஜூலை 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்தியாவில் உள்ள 140 கோடி பேரில் 53 சதவீதத்தினரே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். வேலைவாய்ப்பை பெருக்கி, தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் வளா்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும் என்றாா்.

இதில், தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா் சங்க முதுநிலைத் தலைவா் ஏ.பி. செல்வராஜன், செயலா் கே. சங்கா், சிவகாசியில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரிகள் சீனிவாசன், ஈஸ்வரன், சதீஷ்குமாா், மேற்பைா்வையாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா் சங்க இணைப் பொருளாளா் ஏ.ஆா். பாஸ்கர்ராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com