வாடகை அளிக்காத கடைகளிலிருந்த பொருள்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சிக்குச் சொந்தமான மூன்று கடைகளுக்கு வாடகை அளிக்காததால் புதன்கிழமை கடையிலிருந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
Published on

சிவகாசி மாநகராட்சிக்குச் சொந்தமான மூன்று கடைகளுக்கு வாடகை அளிக்காததால் புதன்கிழமை கடையிலிருந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

சிவகாசி பேருந்து நிலையத்தில் மனோகரன் என்பவா் இரு கடைகளுக்கும், கணேசன் என்பவா் ஒரு கடைக்கும் பல மாதங்களாக மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தவில்லையாம். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன், கடைகளில் உள்ள பொருள்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாநகராட்சி உதவி ஆணையா் வரலட்சுமி, நகர திட்டமிடுநா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் காவல் துறை முன்னிலையில் கடைகளின் பூட்டை உடைத்து, அங்கிருந்தப் பொருள்களை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அப்புறப்படுத்தப்பட்டப் பொருள்கள் பழைய நாகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com