விருதுநகர்
சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
சாத்தூா் அருகே சடையம்பட்டியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் காலை முதல் சாய்பாபாவுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பிற்பகலிலும், இரவிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.