தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளா் சம்மேளன மாநிலக் குழு கூட்டம்

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஏஐடியுசி தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளா் சம்மேளன மாநிலக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சம்மேளன மாநிலத் தலைவா் மணிமூா்த்தி தலைமை வகித்தாா். சம்மேளன பொதுச் செயலா் என்.கே. ராஜன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இந்திய தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான தி. ராமசாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லிங்கம், ஏஐடியுசி மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் செந்தில்குமாா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் முத்துமாரி, அமைப்புச் செயலா் ரவி, ராஜபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், கைத்தறி நெசவுத் தொழிலை பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான அனைத்து ஜவுளி ரகங்களையும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து அதற்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com