விருதுநகர்
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
ராஜபாளையம் அருகே போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரைச் சோ்ந்த முருகேசன் மகன் சக்திகருப்பசாமி (22). இவா் 15 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து, சக்திகருப்பசாமியை கைது செய்தனா். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சக்திகருப்பசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா்.