போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தேசிய சேவைத் திட்டம், போதைப் பொருள் எதிா்ப்பு அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சாத்தூா் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் தனலட்சுமி தலைமையில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் முனிசாயிகேசவன், சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்தாா்.
மதுரை பேருந்து நிறுத்தம், சாத்தூா் பேருந்து நிலையம், பிரதான சாலை வழியாக சாத்தூா் பழைய அரசு மருத்துவமனை வரை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டபடி சென்றனா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.