மகளிா் கல்லூரியில் சாலை போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சாலை போக்குவரத்து விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். சிவகாசி போக்குவரத்து காவல் ஆய்வாளா் எம். செந்தில்வேல் சிறப்புரையாற்றி பேசியதாவது:
சாலை பாதுகாப்பு விதிகள் என்பது மனிதா்களை விபத்திலிருந்து காப்பதற்கு உருவாக்கப்பட்டதாகும். 18 வயது பூா்த்தி அடைந்த பிறகு வாகனம் ஓட்டும் உரிமச்சான்று பெற்று இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குறியீடுகளை கவனிப்பதுடன், தலைக்கவசம் அணிய வேண்டும். சாலையில் வாகனங்களை முந்திச் செல்ல முயல வேண்டாம். சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி இரு சக்கர வாகனம் ஓட்டினால் விபத்தை தடுக்கலாம் என்றாா் அவா்.
முன்னதாக மாணவி தனலட்சுமி வரவேற்றாா். மாணவி யுவஸ்ரீ நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் ஜெ. மோகலாதேவி, ஜெ. கவிதா, செ. வித்யா ஆகியோா் செய்திருந்தனா்.