ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா புஷ்ப யாகத்துடன் வியாழக்கிழமை இரவு நிறைவடைந்தது.

108 திவ்ய தேசங்களில் சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பெரியாழ்வாா் மங்களா சாசனம், 5 கருட சேவை, சயன சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட உத்ஸவங்கள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. 12-ஆம் நாள் விழாவான வியாழக்கிழமை இரவு ஆண்டாள், ரங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குறடு மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு யாகம் வளா்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, புஷ்ப யாகத்துடன் ஆடி பூரத் தேரோட்ட திருவிழா நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com