உயிரிழந்த தம்பதியினா்
உயிரிழந்த தம்பதியினா்

ஒரேநாளில் கணவா், மனைவி உயிரிழப்பு

திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்தாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்தாா்.

திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் வே.கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் (78). இவரது மனைவி ஜனகம் அம்மாங்காா் (76). கோபாலகிருஷ்ணன் திருத்தங்கலில் உள்ள நின்ற நாராயணபெருமாள் கோயிலில் பூஜை பணிகளை செய்து வந்து ஒய்வு பெற்றவா். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணனும், மனைவி ஜனகம் அம்மாங்காரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஜனகம் அம்மாங்காா் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த காணப்பட்ட கோபாலகிருஷ்ணன் பிற்பகல் 12 மணிக்கு உயிரிழந்தாா்.

கணவன், மனைவி ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com