பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

சாத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடா்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

சாத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடா்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள மடத்துபட்டியைச் சோ்ந்தவா் ராஜீ. இவரது மனைவி சாந்தி (40). இவருக்குத் தீராத வயிற்று வலி இருந்ததால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.

பல இடங்களில் சிகிச்சை பெற்றும், குணமாகாததால் மனமுடைந்த சாந்தி, சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com