வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல், சுடுமண்ணால் செய்யப்பட்ட கூம்பு வடிவம்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட சங்கு வளையல், சுடுமண்ணால் செய்யப்பட்ட கூம்பு வடிவம்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, கண்ணாடி மணிகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
Published on

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் ‘தமிழரின் வரலாற்றைத் தாங்கிப் பிடிக்கும் வெம்பக்கோட்டை’ என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடுப் பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கால் செய்யப்பட்ட பதக்கம், அகேட் வகை அணிகலன்கள், செப்புக் காசுகள், உடைந்த சுடுமண் உருவப்பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,900-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. தற்போது சுடுமண் காதணி, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, ‘தமிழரின் வரலாற்றைத் தாங்கிப் பிடிக்கும் வெம்பக்கோட்டை’ எனவும், தமிழரின் மரபையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டைத் திகழ்ந்து வருகிறது. ஏற்கெனவே உடைந்த நிலையில் கிடைத்த காதணி, தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இதுமட்டுமன்றி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட ‘பைக் கோன்’ என அழைக்கப்படும் இருமுனைக் கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மணிகளும் பல கிடைத்துள்ளன என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது எனவும் தனது பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com