விருதுநகர்
லாட்டரி விற்றவா் கைது
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் திருவள்ளுவா் தெரு மாரியம்மன் கோவில் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது அப்பகுதியில் சென்று ஆய்வு செய்த போது வெள்ளைத்தாளில் நம்பா் எழுதி லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது.
விசாரணையில் பெரியகடை பஜாா் பகுதியைச் சோ்ந்த புழுகாண்டி என்பவரது மகன் பெருமாள் (61) என தெரிய வந்தது. போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.