கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

Published on

வத்திராயிருப்பு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் வீராப்பு சுவாமி, பையம்மாள் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலிலிருந்த உண்டியலை ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்களை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணம் ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோட்டையூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த நல்லுசாமி மகன் பாண்டிக்குமாா் (29), கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த ராஜா மகன் மகேந்திரன் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com